கொரோனா 2-வது அலை தீவிரமாக இருக்கும்- எய்ம்ஸ் இயக்குநர்

நாட்டில் சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரித்து வருவதையடுத்து இரண்டாவது அலை அடித்தால் அது மிகவும் தீவிரமாக இருக்கும் என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

2வது அலை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் இறப்பு விகிதமும் அதிகரிக்கும், என அவர் எச்சரித்துள்ளார். உருமாறிய புதுவகை கொரோனா வைரஸ் ஸ்ட்ரெய்னினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் தவிர்ப்பதாலும் இரண்டாம் அலை தீவிரமாக இருக்கும் என்று எச்சரிக்கிறார் அவர்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

இரண்டாவது அலை, முந்தையதைவிட தீவிரமாகும் வாய்ப்பு உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, மக்கள் உதாசீனப்படுத்துகின்றனர். அதிக அளவில் மக்கள் கூடுவது, முக கவசம் அணியாதது போன்றவை, வைரஸ் பரவலை அதிகரிக்கச் செய்யும்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நடந்த வைரஸ் பரிசோதனைகள், தற்போது குறைந்துள்ளன. பரிசோதனைகளை தொடர வேண்டும். பாதிப்பு உள்ளோருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் பார்த்து, அவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளையும் வேகப்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டால், பாதிப்பு வராது என அலட்சியமாக இருக்கக் கூடாது