கரோனா தொற்று இருப்பவர்களும் வாக்கு பதிவு செய்யலாம் !

up-election-2022-voting-live-updates-up-assembly-election-phase-7-vote
வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.இதற்கான பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தலில் வாக்களிக்க வருபவர்கள் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் வழக்கத்தை விட, இந்த சட்டசபை தேர்தலில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளும் இந்த தேர்தலில் வாக்களிக்கலாம்.

மேலும் தொற்றின் பாதிப்பை தடுக்கும் வகையில் பிபிஇ கிட் அணிந்து வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் தேர்தலில் வாக்களிக்கலாம். அவர்கள், பிபிஇ கிட் அணிந்துக் கொண்டு வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம் என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.