குக் வித் கோமாளி சீசன் 3 அப்டேட்

குக் வித் கோமாளி சீசன் 3 இன்னும் மூன்று மாதங்களில் தொடங்கயுள்ளதாக சோசியல் மீடியாவில் செய்திகள் பரவி வருகின்றது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி தொடங்கியது முதல் இன்று வரை சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியின் மாபெரும் தூண்கள் என்றால் அது சிவாங்கி, புகழ், மணிமேகலை, பாலா போன்றவர்கள் தான். இவர்களது காமெடி, மற்றவர்களை கலைப்பது போன்ற திறமைகளால் மக்களை மயங்க வைத்துள்ளார்கள்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு அடிமை. அதுமட்டும் இல்லாமல் வெளிநாட்டில் வாழ்கின்ற மக்கள் கூட இந்நிகழ்ச்சியை காண்கின்றனர் போன்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்களை கடந்து விட்டது. இருந்தாலும் இது மக்களுக்கு சலித்து போகவில்லை. சொல்ல போனால் சீசன் ஒன்றை விட சீசன் 2 செம ஹிட் என்று தான் சொல்ல வேண்டும்.

இதில் குக்குகளுக்கு கிடைக்கின்ற மரியாதை, புகழ் முதலியவற்றை விட கோமாளிக்கு கிடைப்பது தான் அதிகம். இந்நிலையில் எப்பொழுது மூன்றாவது சீசன் எப்போ தொடங்கும் என்று ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். இதையடுத்து குக் வித் கோமாளி இன்னும் மூன்று மாதங்களில் ஆரம்பிக்கயுள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.