இனி பள்ளிகளில் வருகிறது புகார் பெட்டி !

பாலியல் தொல்லை குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் புகார்பெட்டி வைக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் குடியிருக்கும் மத போதகர் எஸ்.ஜெயசீலன், அந்த வளாகத்தில் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த 12 வயது மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் ஜெயசீலனுக்கு 5 ஆண்டுகள் சிறை தாண்டனையும், 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது, அதுகுறித்து புகார் அளித்தால் தங்கள் கல்வி பாதிக்கப்படும் என மாணவிகள் அச்சம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் தொல்லை குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும், சமூகநலத் துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி அமைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.