cockroach in briyani : அதிர்ச்சி..சாப்பிட்ட உணவில் கரப்பான்பூச்சி

cockroach in briyani
அதிர்ச்சி..சாப்பிட்ட உணவில் கரப்பான்பூச்சி

cockroach in briyani : இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான்.எந்த ஒரு விழா என்றாலும் அனைவரும் பிரியாணி என்று தான் சொல்கிறார்கள் அந்த அளவிற்கு பிரியாணி மோகம் மக்களை பிடித்துள்ளது.

மேலும் முன்பெல்லாம் பிரியாணி என்றால் பிரபலமான சில ஹோட்டல்களில் தான் கிடைக்கும்.ஆனால் தற்போது அணைத்து தெருக்களிலும் பிரியாணி கடை வந்துள்ளது.மக்கள் கூட்டம் கூட்டமாக பிரியாணியை கடைகளுக்கு செல்கின்றனர்.

ஆனால் அணைத்து கடைகளிலும் அதன் தரம் இருப்பதில்லை.சென்னை பழைய மகாபலிபுரம் சாலை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ளது புஹாரி ஹோட்டல்.இந்த கடையில் உணவருந்த வந்த தம்பதி வந்திருந்தனர். அப்போது அவர்கள் பிரியாணியை ஆர்டர் செய்தனர்.

அவர்கள் பிரியாணி சாப்பிட்டு முடிக்க போகிற நேரத்தில் ஒரு அவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்த பிரியாணியில் ஏதோ கருப்பாக இருந்ததை தம்பதி கண்டனர். அது மசாலாவாக இருக்கும் என நினைத்த நிலையில் அது கரப்பான் பூச்சி. இதனால் அதிர்ச்சி அடைந்து உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்தனர்.cockroach in briyani

இடத்தியும் படிங்க : Booster vaccine : இன்று முதல் செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசி

இவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு வந்த உணவு பாதுகாப்புத் துறையினர் உணவகத்தில் சோதனை மேற்கொண்டார். அதில் சமையலறை பகுதியில் விதிமுறைகள் எதுவும் பின்பற்றாமல் இருந்ததை கண்டார். மேலும், அசுத்தமான நிலையில் உணவு சமைக்கப்படுவதையும் சமைக்கும் பகுதியில் கரப்பான் பூச்சி சுற்றித் திரிவதையும் பார்த்துள்ளார்.விசாரணையில் சுத்தம் இல்லாததால் மூன்று நாட்களுக்குள் சரி செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் உறுதி செய்த பிறகே உணவகத்தை திறக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.மேலும் 5000 ரூபாய் அபாரதத்தை விதித்தார்.

( cockroach found in briyani from chennai’s famous hotel )