cm stalin meets Arvind Kejriwal : கெஜ்ரிவாலுடன் முதல்வர் ஸ்டாலின்

cm stalin meets Arvind Kejriwal
கெஜ்ரிவாலுடன் முதல்வர் ஸ்டாலின்

cm stalin meets Arvind Kejriwal : தமிழக முதல்வர் ஸ்டாலின், மார்ச் 30 முதல் தில்லிக்கு நான்கு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை அவரிடம் எடுத்துரைக்கிறார்.
2021 மே மாதம் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு பிரதமரை அவர் சந்திக்கும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.

டெல்லி தி.மு.க. அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார். அதன்பிறகு தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

குறிப்பாக தமிழகத்துக்கு தர வேண்டிய நிதி நிலுவை தொகையை உடனடியாக தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதியையும் தாமதம் இல்லாமல் தர வேண்டும்.

மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். அரசுப்பள்ளி, இலவச கிளினிக் திட்டதை கெஜ்ரிவாலுடன் சேர்ந்து இருவரும் பார்வையிட்டனர். மேற்கு வினோத் நகரில் இருக்கும் ராஜ்கிய சர்வோதய கன்யா வித்யாலயாவில் முதல்வர் ஸ்டாலின், கெஜ்ரிவால் இருவரும் பார்வையிட்டனர்.

தில்லியைப் போன்று தென் மாநிலத்தில் முன்மாதிரிப் பள்ளிகளை உருவாக்கி வருவதாகவும், அவற்றைப் பார்வையிட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் டெல்லி அரசுப் பள்ளிக்குச் சென்றார். அங்கு ஆம் ஆத்மி ஆட்சியில் கல்வி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தமிழக முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.டெல்லி அரசு கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக கல்விக்காக தனது பட்ஜெட்டில் 25 சதவீதத்தை தொடர்ந்து செலவழித்து வருவதாக அதிகாரி ஒருவர் ஸ்டாலினிடம் தெரிவித்தார்.cm stalin meets Arvind Kejriwal

இதையும் படிங்க : LPG cylinder price : சிலிண்டர் விலை உயர்வு

கொரோனா தொற்று வந்த பிறகு விலைவாசி உயர்வு தொடங்கியது.மேலும் உக்ரைன் ரஷ்யா நாட்டு போருக்கு பிறகு கட்சா எண்ணெய் விலை உயர்வால் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது.

ஏப்ரல் 1 முதல் எல்பிஜி சிலிண்டர் விலை ₹250க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் வெள்ளிக்கிழமை 19 கிலோ காஸ் சிலிண்டர் விலை ₹2,253 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை, சிலிண்டருக்கு ₹346 உயர்த்தப்பட்டது. முன்னதாக மார்ச் 1ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ₹105 உயர்த்தப்பட்டு, மார்ச் 22ஆம் தேதி ₹9 குறைக்கப்பட்டது.

( tamilnadu cm mk stalin meets arvind kejiriwal )