படப்பிடிப்பின் பொது விபத்தில் சிக்கிய அஜீத்

வலிமை படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் சண்டை காட்சிகளில் கலந்துகொண்டபோது நடிகர் அஜீத்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொண்டு அஜித்குமார் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அதனை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். அஜித்துக்கு காயம் ஏற்பட்டதை ரகசியமாக வைத்திருந்த படக்குழு படப்பிடிப்பு முடிந்த பின்னர் இத்தகவலை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.