நடன இயக்குனர் கூல் ஜெயந்த் காலமானார் !

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடன இயக்குநராக இருந்தவர் கூல் ஜெயந்த். 90 களில் உள்ள சினிமாக்களில் அதிகமாக கண்டறியப்பட்டவர்.

காதல் தேசம்’ திரைப்படத்தில் முதன்முதலாக நடன இயக்குநராக அறிமுகமானார்.தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்த கூல் ஜெயந்த் மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்

இந்நிலையில்,திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை (நவ. 10) சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது.