Chocolate Pasta: குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் பாஸ்தா

chocolate-pasta-recipe
சாக்லேட் பாஸ்தா

தேவையான பொருட்கள்

பாஸ்தா – 1 கப்
காய்ச்சிய பால் – 1 கப்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
கோகோ பவுடர் – அரை கப்
hershey’s chocolate syrup – 2 டீஸ்பூன்
சாக்லேட் சிப்ஸ்- விருப்பத்திற்கேற்ப

செய்முறை

பாஸ்தாவை வேக வைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து பால் ஊற்றி சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்றாக கலக்கவும்.

சர்க்கரை கரைந்தவுடன் அதில் கோகோ பவுடரை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொண்டே இருக்கவும்.

கலவை திக்காக பதம் வந்தவுடன் அதில் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறவும்.

சாக்லேட் கலவையில் பாஸ்தாவை நன்றாக வேக விடவும்.

அடுத்து அதில் hershey’s chocolate syrup விட்டு மீண்டும் நன்றாக கலந்து விட்டு கொண்டே இருக்கவும்.

சாக்லேட் கலவை முழுவதும் பாஸ்தாவில் சேர்ந்தவுடம் அடுப்பில் இருந்து இறக்கி சாக்லேட் சிப்ஸ் தூவி பரிமாறவும்.

இதையும் படிங்க: sexual Harassment IIT madras : ஐஐடியில் பாலியல் வன்கொடுமை