Kid Died Of Starvation: பட்டினியால் குழந்தை உயிரிழப்பு

பட்டினியால் குழந்தை உயிரிழப்பு
பட்டினியால் குழந்தை உயிரிழப்பு

Kid Died Of Starvation: கடந்த 15ஆம் தேதி விழுப்புரத்தில் மேல் தெரு என்ற இடத்தில் சிவகுரு என்பவருக்கு சொந்தமான நான்கு சக்கர தள்ளுவண்டி 5 வயது மதிக்கதக்க ஆண் குழந்தை ஒன்று உறங்கிய நிலையில் கிடந்துள்ளது.

குழந்தை தூங்குவதாக நினைத்து அக்கம்பக்கத்தினர் குழந்தையை தட்டி எழுப்ப முயற்சித்தபோது , அது அசைவின்றி கிடந்துள்ளது. இதனால் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் , சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்ததில் குழந்தை இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் குழந்தையின் புகைப்படத்தை காட்டி அங்குள்ள அனைத்து வீடுகளிலும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இன்னிலையில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில் குழந்தை உணவு இல்லாமலும் தண்ணீர் இல்லாமலும் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை யாருடையது ?அங்கு எப்படி வந்தது? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை குழந்தைக்கு உரிமை கொண்டாடி யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: E-scooter: இ-ஸ்கூட்டர் வெடித்து முதியவர் உயிரிழப்பு..!

karisalankanni: தலைமுடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி இலைகளை தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும்.

கீரையை சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.

பெண்களுக்கு கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

இப்படிப்பட்ட கரிசலாங்கண்ணி எண்ணெயை கிராம புறங்களில் பலர் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கரிசலாங்கண்ணி எண்ணெயை வாங்க விரும்பினால் 9791886213 என்ற நம்பருக்கு போன் அல்லது வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: E-scooter: இ-ஸ்கூட்டர் வெடித்து முதியவர் உயி