Flood relief fund: மழை நிவாரணமாக ரூ.5000 வழங்கும் பணி தொடங்கியது..!

Rangasamy Flood relief fund
மழை நிவாரணமாக ரூ.5000 வழங்கும் பணி தொடங்கியது

Flood relief fund : புதுச்சேரியில் மழை நிவாரணமாக 5000 ரூபாய் வழங்கும் பணியினை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் அனைவருக்கும் மழை நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி, புதுச்சேரியில் மழை நிவாரணமாக வழங்கும் பணியினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதேபோல் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு தலா 4,500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகைக்கான இலவச பொருட்கள் அரசு நிறுவனமானஅமுதசுரபி மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். புத்தாண்டு கொண்டாட்டம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள் நீங்கலாக சிவப்பு அட்டை தாரர்கள் 1,85,000 மஞ்சள் அட்டைதார்கள் 1,42,000 என பயன்பெறுவார்கள். இதன் மூலம் 156 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதலாக செலவாகும்.

இதையும் படிங்க: white hog deer : அரிய வகை வெள்ளை மான் !

Flood relief fund