Crime: கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரை

chennai-special-team-police-arrested-a-degree-holder-girl-with-5-men-crime
கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரை

Crime: பப்ஜி விளையாட்டு மூலம் கூட்டு சேர்ந்து கொண்டு இளம் பெண் தலைமையில் போதை மாத்திரை கும்பல் சிக்கியது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் போதை மாத்திரைகளை வெளிமாநிலங்களில் இருந்து கூரியர் மூலம் கடத்தி வந்து விற்பனை செய்யும் கும்பல் ஒன்று செயல்படுவதாக போலீஸார் ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த கும்பல் போதை மாத்திரை என்று வலி நிவாரணி மாத்திரைகளை விற்பதாகவும் தெரியவந்தது. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் இந்த மருந்துகளை விற்கவே கூடாது. ஆனாலும் இவர்கள் சட்டவிரோதமாக போதை மருந்துகளை விற்பனை செய்வது தெரியவந்தது.

Crime: கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரை

இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. போதை மருந்துகளை பயன்படுத்தும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே வாட்ஸ் ஆப் குழு அமைத்து மாத்திரைகளை இந்த கும்பல் சப்ளை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களை முழுமையாக போலீஸார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்த கும்பலை சேர்ந்தவர்களை கூண்டோடு கைது செய்ய கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கோடம்பாக்கம் பகுதியில் தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போலீஸார், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நித்தீஷ் என்பவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: TN Budget 2022: கரும்பு விவசாயிகளுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை

அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோடம்பாக்கம், டிரஸ்டுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த இருவரை போலீஸார் பிடித்தனர்.

அவர்கள் அசோக் நகரை சேர்ந்த கிஷோர் மற்றும் கே கே நகரை சேர்ந்த கிஷோர் குமார் ஆகியோர் என தெரியவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் டைடால், நைட்ரோவிட் போன்ற வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகள் என்பது தெரியவந்தது.

இவற்றை போதைக்காக விற்பனை செய்வதும் தெரியவந்தது. இந்த இருவர் அளித்த தகவலின்படி கொத்தவால்சாவடி பகுதியில் இதே போல் வலி நிவாரணி மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த பட்டதாரி பெண் பூந்தமல்லியை சேர்ந்த ராஜேஷ்வரி (22) உள்பட கொத்தவால்சாவடியை சேர்ந்த பூங்குன்றன், கோகுல், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரியின் காதலன் முத்துப்பாண்டி ஆகிய 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பட்டதாரி பெண்ணான ராஜேஷ்வரிதான் மூளையாக செயல்பட்டார் என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாங்கி வைத்த கருக்கலைப்பு மாத்திரைகளை தான் பயன்படுத்தியது போல மீதமுள்ள மாத்திரைகளை கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததும் இதில் நல்ல லாபம் பார்த்ததால் இது போன்ற சட்டவிரோதமாக மாத்திரைகளை விற்பனை செய்ததை தொடர்ந்ததும் தெரியவந்தது.

Crime: கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரை

இந்த திட்டத்தை பப்ஜி விளையாட்டில் தனக்கு அறிமுகமான பூங்குன்றன் என்பவரிடம் ராஜேஷ்வரி கூறியுள்ளார். அவருடன் சேர்ந்து கொண்டு டெல்லியில் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலிடம் இருந்து கொரியர் மூலம் கருக்கலைப்பு, வலி நிவாரணி, தூக்க மாத்திரைகளை வரவழைத்து கொத்தவால்சாவடியில் உள்ள பூங்குன்றனின் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பல லட்சங்களை ராஜேஷ்வரி அள்ளியதால் அவரது உறவினரான முத்துப்பாண்டி அவரை காதலிப்பதாக கூறியதை அடுத்து அவரும் இந்த மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. வாட்ஸ் ஆப், சமூகவலைதளங்கள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு கூகுள் பே, பே டிஎம் மூலமாக பணம் பெற்றுக் கொண்டு இந்த கும்பல் அவர்களுக்கு மருந்துகளை சப்ளை செய்துள்ளது தெரியவந்தது.

டெல்லியில் இருந்து 100 மாத்திரைகளை 8 ஆயிரம் ரூபாய்க்கு ராஜேஷ்வரி, பூங்குன்றன் ஆகியோர் வாங்கி அதை கோகுல், கிஷோர், கிஷோர் குமார் ஆகியோருக்கு 10 மாத்திரைகளை ரூ 2500 க்கு விற்தும், அவர்கள் அதை 3 ஆயிரம் முதல் 3500 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 7,530 டைடால், நைட்ரோவிட் மாத்திரைகள், 4 லட்சம் பணம், 3 இரு சக்கர வாகனங்கள், ஆப்பிள் ஐபேட், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்து 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: TN Budget 2022: பனை பொருட்களை உற்பத்தி செய்ய ரூ.2.65 கோடி நிதி