100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க எதிர்ப்புத்தெரிவிக்கும் மனு – அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

நூறு விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. 

திரையரங்குகளை நூறு விழுக்காடு இருக்கைகளுடன் செயல்பட அனுமதித்த உத்தரவுக்குத் தடை கோரி வழக்கறிஞர் பிரபு வழக்குத் தொடுத்திருந்தார். இந்நிலையில் வழக்கை அவசர வழக்காக இன்று(ஜனவரி 07) பிற்பகல் விசாரணைக்கு எடுக்கக்கோரி தலைமை நீதிபதி அமர்வில் பிரபு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. 

இந்நிலையில் முறையீட்டை ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்புத் தெரிவித்துள்ளது.