சென்னை மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு !

சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின் கீழ் பெண்கள் மிதிவண்டிப் பயணம் மற்றும் மாநகராட்சிப் பூங்காக்களில் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுதல் போன்றவை பொதுமக்களின் ஆரோக்கிய நலனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தீவிர தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வினைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பெண்கள் மிதிவண்டிப் பயணத்தில் பங்கு பெறுபவர்கள் விழிப்புணர்வுப் பதாகைகளுடன் பயணம் மேற்கொள்வார்கள்.

மேலும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், ஒரு வாரத்திற்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 29 முக்கியப் பூங்காக்களில் சிலம்பம், கராத்தே, யோகா மற்றும் ஜூம்பா போன்ற விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

இதன் விபரங்கள் https://chennaicorporation.gov.in/gcc/pdf/Parks_list.pdfhttps://chennaicorporation.gov.in/gcc/pdf/Parks_list.pdf என்ற இணையதளத்தில் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இன்றைய ராசி பலன் !