chennai : சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து

chennai
சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து

chennai : சென்னையில் இன்று மாலை பிளாட்பாரத்தில் மின்சார ரயில் விபத்துக்குள்ளானது. ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளானது. தாம்பரம் நோக்கிச் சென்ற ரயில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணிமனையில் இருந்து ரயில் புறப்பட்டதால், பயணிகள் யாரும் ரயிலில் இல்லை. டிரைவர் மட்டும் காயம் அடைந்ததாகவும், பிரேக் சரியாக வேலை செய்யாததால் விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விடுமுறை நாள் என்பதால் பிளாட்பாரத்தில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தில் ரயில் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டை இழந்த ரயில் வேகமாக சென்று ரயில் நிலையத்தில் உள்ள ஒரு கடையின் சுவற்றில் மோதி நின்றதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றிரண்டு கடைகள் லேசாக சேதமடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து, ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாகவே கடற்கரை மின்சார ரயில் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

இதையும் படிங்க : CSIR-NPL recruitment: CSIR-NPL ஆட்சேர்ப்பு விபரங்கள்

 CSIR-National Physical Laboratory, 25 விஞ்ஞானிகளின் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆய்வகத்தில் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி மே 30 ஆகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் nplindia.org இல் உள்ள CSIR-NPL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.

மே 30 ஆம் தேதியின்படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு SC/ST க்கு 05 ஆண்டுகள் வரையிலும், OBC க்கு 03 ஆண்டுகள் வரையிலும் அந்த பிரிவினருக்கு பதவி ஒதுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே அரசு தளர்த்தியுள்ளது.

CSIR-NPL ஆட்சேர்ப்பு விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் ₹100 விண்ணப்பக் கட்டணமாக டிமாண்ட் டிராஃப்ட்/பே ஆர்டர் வடிவில் ஏதேனும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் “இயக்குனர், தேசிய உடல் ஆய்வகத்திற்கு” ஆதரவாக குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

( electric train lost control in chennai )