அமெரிக்கா அதிபர் பதவியேற்பு விழாவில் ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது

வழக்கமாக பதவி நிறைவு செய்யும் அதிபர், புதிதாக பதவியேற்கும் அதிபருக்கு பதவியேற்பு நாளன்று காலையில் விருந்தளிப்பார். தொடர்ந்து இருவரும் இணைந்து சென்று பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம், அப்போதைய அதிபர் ஒபாமா, டிரம்புக்கு விருந்தளித்தார்.

ஆனால், தற்போது, விருந்து நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பு இல்லை. ஏனெனில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் என ட்ரம்ப் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

கடந்த 152 ஆண்டுகளில் பதவிகாலம் முடியும் அதிபர், புதிய அதிபரின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருப்பது இதுவே முதன்முறை. நாளை காலையிலேயே வெள்ளைமாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேறிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அதிபராக பதவியேற்கும் ஜோ பைடனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸும், கமலா ஹாரிஸுக்கு நீதிபதி சோடாமேயரும் நாளை பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளனர். கொரோனா மற்றும் கலவரம் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக வழக்கமாக நடைபெறும் அணிவகுப்புகள் மற்றும் பிற இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் இம்முறை ஆன்லைனில் நடைபெறும் என்றும், லைவ் ஸ்டீரிமிங் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.