Rain in tn: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவக் காற்று காரணமாக வரும் 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனையமாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.Rain in tn

சென்னையில் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.