tn news : தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 30ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.



