tn news : 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !

TN Rain
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

tn news : தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால், நடப்பு ஆண்டில் தமிழகத்தில் அதிக அளவு மழை பதிவாகி இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று நண்பகலில் திடீரென சாரல் மழை பெய்து மக்களை குளிர்வித்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்து உள்ளது.tn news

சென்னை அண்ணா சாலை, சேப்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், பாரிமுனை, திருவல்லிக்கேணி, மைலாப்பூர், மண்ணடி, கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் தொடங்கி சில இடங்களில் கனமழை பெய்துவருகிறது. அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Omicron in tamilnadu : மெல்ல அதிகரிக்கும் ஓமிக்ரான் !