தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு !

orange alert : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியது,வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 16-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

மேலும் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

மற்றும் 17-ம் தேதி நீலகிரி, கோவை, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திரு வள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவித்துள்ளார்.