வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை வடகிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நாளை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தமிழகத்தில் சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோவை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை