Heavy snowfall: உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு

uttarakhand snow
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு

Heavy snowfall: வடமாநிலங்களை கடும் குளிர் வாட்டி வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. அம்மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் கட்டங்கள், வாகனங்கள், மரங்கள் பனி மூடி காணப்பட்டன.

அங்குள்ள பத்ரிநாத் கோவில் பகுதிகளில் நீடித்த பனிபொழிவால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதிகாலை வேளையில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவானது. அடுத்த ஒருவாரத்திற்கு பனிப்பொழிவு நீடிக்கும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Omicron: இந்தியாவில் 578 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ்

Omicron: சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது இதுவரை 151 பேர் சிகிச்சைக்கு பின் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக டெல்லியில் 142 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 141 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் 49, ராஜஸ்தான் 43, தெலங்கானா 41, கர்நாடகாவில் 31 பேர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கிறது.

கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்த மாநிலத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 19 மாநிலங்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேலும் 6,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 7,141 பேர் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர். மொத்தம் 75,7841 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: Horoscope Today : இன்றைய ராசி பலன் !