தமிழகத்தில் புதிய விமான நிலையங்கள் குறித்து மத்திய அரசு கருத்து !

international-flight-service-from-march-27
மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவை

தமிழகத்தில் விமான சேவைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி வில்சன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ராமநாதபுரம், தஞ்சாவூர், நெய்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்காக 195 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சேலத்திற்கு 35 கோடி, தஞ்சைக்கு 50 கோடி, நெய்வேலிக்கு 30 கோடி, வேலூருக்கு 44 கோடி, ராமநாதபுரத்திற்கு 36 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் சிறிய விமான நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.