பிலவ வருடம் புரட்டாசி மாதம் 28 ஆம் நாள் வியாழன் கிழமை அன்று சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கு மறுநாள் வெள்ளிக் கிழமையில் விஜயதசமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.
சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை அன்று நீங்கள் சர்க்கரை பொங்கல் மற்றும் கொண்டை கடலை சுண்டல் செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்
அவரவர் தொழிலுக்கு ஏற்ப அது சம்பந்தப்பட்ட பொருட்களை வைக்க வேண்டும். குழந்தைகள் கல்வி அறிவில் சிறக்க நோட்டு புத்தகங்களை வைக்க வேண்டும். கலைகளில் சிறந்து விளங்க கலைக்கு உண்டான பொருட்களையும் நாம் வைக்க வேண்டும்
வண்டி, வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவற்றிற்கு எலுமிச்சை மாலை சாற்றி, சந்தன, குங்கும திலகமிட்டு பூஜை செய்ய வேண்டும்.
. சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10.30 மணிவரை பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரை மாலை 04.30 மணிவரை 6.50 மணிவரை பூஜை செய்யலாம்.
இதையும் படிங்க : இன்றைய ராசி பலன் !



