பைஜூஸ் விளம்பரத்தில் ஷாரூக் கான் நீக்கம்

சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது.

பெங்களூருவை சார்ந்த ஆன்லைன் கற்றல் நிறுவனமான பைஜூஸ், தனது நிறுவனத்துக்கான விளம்பர படங்களில் ஷாரூக் கானை நடிக்க வைத்திருந்தது.

ஆனால், தற்போது அவருடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதால் அந்நிறுவனம் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்தன. இதன் காரணமாக, தங்களுடைய விளம்பரப் படங்களில் இருந்து ஷாரூக் கானை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது பைஜூஸ் நிறுவனம்.

பைஜூஸ் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களுக்கான விளம்பரப் படங்களில் ஷாரூக் கான் நடித்து வந்தார்.2017ம் ஆண்டு முதல் பைஜூஸ் நிறுவனத்துக்கான விளம்பர தூதுவராக அவர் நடித்து வந்தார்.இதற்காக ஆண்டுதோறும் 4 கோடி ரூபாய் வரை சம்பளமாக அவர் வாங்கியுள்ளார்.பைஜூஸ் நிறுவனம் குறுகிய காலத்திலேயே அதீத வளர்ச்சியை அடைந்ததற்கு ஷாரூக் கானின் பங்களிப்பும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள சார்ச்சையால், ஷாரூக் கான் நடித்த விளம்பரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும் அவர் தொடர்ந்து அந்நிறுவனத்தின் விளம்பரங்களில் நடிப்பாரா இல்லையா என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.

ஷாரூக் கான் நடித்த பைஜூஸ் விளம்பர படங்கள் நாடு முழுவதும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் மிகப் பிரபலமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு