Book fair in Chennai: வரும் 6 முதல் 23ம் தேதி வரை இலவசம்..!

book fair
புத்தகக் காட்சி

Book fair in Chennai: சென்னை புத்தகக் காட்சி ஜன. 6-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி புத்தகக் காட்சியை தொடங்கி வைக்கிறார். ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் புத்தக திருவிழா வரும் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.

வாரநாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும் எனவும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை புத்தகக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக்காட்சியில் மாணவர்களுக்கு அனுமதி இலவசம்; மற்றவர்களுக்கு 10 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Pink Bus: பெண்கள் இலவசமாக பயணம் செய்ய பிரத்யேக பேருந்துகள்- அமைச்சர் சந்திரபிரியங்கா

Pink Bus: தமிழகத்தில் பெண்கள், திருநங்கைகள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வது போலவே புதுச்சேரியிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய பிரத்யேக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

நிர்பயா திட்டத்தின் கீழ் இளஞ்சிவப்பு நிறத்தில் பெண்களுக்கென இலவச பேருந்துகள் இயக்கப்படும் என புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர் நாட்டிலேயே முதல் முறையாக பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு சனிக்கிழமை தோறும் போக்குவரத்து அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும் தெரிவித்தார்.

மேலும் இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்த அமைச்சர் சந்திரபிரியங்கா பிஆர்டிசியில் உள்ள பேருந்துகளில் 164 மட்டுமே இயக்கப்படுகிறது என்றும் பழுதாகி உள்ள 90 பேருந்துகள் விரைவில் சீர் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: TN Assembly session: ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வால்வோ ஏசி பேருந்துகள் பழுது பார்க்கப்படும் மீண்டும் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். பிஆர்டிசியில் டிக்கெட் பரிசோதகர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துடன் இணைந்து டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்தார். பி.ஆர்.டி.சி.யை லாபகரமாக இயக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அனுமதியுடன் 200 புதிய பேருந்துகள் வாங்க உள்ளதாகவும் இதில் பிங்க் நிற பேருந்துகளை பெண்களுக்கென இலவசமாக இயக்க முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அனைத்து பேருந்துகள், பேருந்து நிறுத்தங்கள் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார். ஆதிதிராவிடர் நலத்துறையில் தீபாவளி பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதில் பணம் வழங்கப்பட்டதால் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்க திட்டமிட்டுள்ளதாக சந்திர பிரியங்கா தெரிவித்தார். மேலும் பாண்டெக்ஸ், பாண்பேப், அமுதசுரபி மூலம் இலவச துணிகளைக் கொள்முதல் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: Kashi Vishwanath Corridor: காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்து வைத்தார் மோடி