நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தற்போது விக்ரம் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவான்மியூரில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சாஸ்திரி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். நடிகர்களுக்கு, வழக்கமாக மிரட்டல் விடும் மரக்காணத்தைச் சேர்ந்த நபரா என்ற கோணத்தில் முதல் கட்ட விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.