BJP Annamalai: தமிழக முதல்வர் பொய்யை மட்டுமே பேசுகின்றார் – அண்ணாமலை

bjp annamlai
தமிழகத்தில் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக தி.மு.க. தான் உருவாக்கி வருகிறது- அண்ணாமலை

BJP Annamalai: பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலை தெளிவாக உள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது பற்றி இதுவரை வாயே திறக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க., கர்நாடக காங்கிரஸ் கட்சியின் போக்கை இதுவரை கண்டிக்கக்கூட இல்லை. இதுதொடர்பாக ஒருவார்த்தை கூட பேசாத முதல்-அமைச்சராக தமிழக முதல்-அமைச்சர் மாறி இருக்கிறார்.

இதையும் படிங்க: Corona virus: 549 நாட்களுக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்ட நபர்

எனவே, கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் ரகசிய உறவு இருக்கிறதா? அதை தி.மு.க ஆமோதிக்கிறதா? என்பதை கேட்க வேண்டும்.

பிரதமர் மோடி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் கொடுக்காத திட்டங்களை தமிழகத்துக்கு கொடுத்து உள்ளார். தமிழக அரசுக்கு தொலைநோக்கு திட்டம் கிடையாது. எதுவுமே இல்லாமல் அவா்கள் கடைசியாக நம்பியிருப்பது டாஸ்மாக்கை தான். மதுபானங்களின் விலையை உயர்த்தினால் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

அதனால் தலை தப்பிவிடும் என கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அரசை நடத்திவிடலாம் என நம்பிக்கொண்டு இருக்கின்றனர். இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியா? தமிழக முதல்-அமைச்சர் பொய்யை மட்டுமே கூறிக்கொண்டு ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

(BJP Annamalai about Tamil Nadu government)

இதையும் படிங்க: TRB Exam: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு