பண்டைய எகிப்தியர்களை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு தயாரிக்க பயன்படும் எம்பாமிங் செயல்முறையின் முக்கியமான நடவடிக்கைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட மம்மிபிகேஷன் (mummification) குறித்த மிகப் பழமையான கையேடு சமீபத்தில் 3,500 ஆண்டுகள் பழமையான மருத்துவ பாப்பிரஸில் (papyrus) கண்டுபிடிக்கப்பட்ட கையேட்டை அடிப்படையாகக் கொண்டது.
பண்டைய எகிப்தில், எம்பாமிங் ஒரு புனிதமான கலையாகக் கருதப்பட்டது, மேலும் இந்த செயல்முறையைப் பற்றிய அறிவு மிகக் குறைந்த நபர்களுக்கே தெரியும்.
சடலத்தை பதப்படுத்தும் கலையின் பெரும்பாலான ரகசியங்கள் ஒரு எம்பாமரில் இருந்து மற்றொருவருக்கு வாய்வழியாக கற்பிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எழுத்துபூர்வமான சான்றுகள் மிகவும் குறைவு. இதுவரை வரை, மம்மிபிகேஷன் எனப்படும், சடலத்த்டை பதப்படுத்துவது குறித்த இரண்டு நூல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போது மருத்துவ ஏடு ஒன்றில் எம்பாமிங் குறித்த ஒரு சிறிய குறிப்பேடு கிடைத்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மூலிகை மருத்துவம் மற்றும் சருமம் ஊதிப்போவது தொடர்புடையது.
எம்பாமிங் செயல்முறையை மறுகட்டமைப்பதில் பாப்பிரஸ் லூவ்ரே-கார்ல்ஸ்பெர்க் (Louvre-Carlsberg) என்பவரின் கையேடு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த செயல்முறையின் விவரக்குறிப்பு நான்கு இடைவெளிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, எம்பாமர்கள் ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு ஒருமுறை மம்மியில் தீவிரமாக வேலை செய்வார்கள்.



