கொஞ்சும் தமிழும் குழந்தை சிரிப்பும் கொண்ட மீனாவின் பிறந்தநாள்..!

தென்னிந்திய சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக நடித்த மீனா, எஜமான், ராஜகுமாரன், வீரா, பாரதி கண்ணம்மா, ஷாக் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் மீனா.

நடிகை மீனா என்றதுமே கொஞ்சும் தமிழும், குழந்தை சிரிப்பும், குறும்புத்தனமான நடிப்பும்தான் பலருக்கும் முதலில் நினைவில் வரும். ‘நெஞ்சங்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘முத்து’, ‘எஜமான்’, ‘ரிதம்’, ‘அவ்வை ஷண்முகி’, ‘த்ரிஷ்யம்’ என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இவரது பிறந்தநாள் நாளை கொண்டாடவுள்ளார். எனவே அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்