50 சதவீத வருகையுடன் பள்ளி,கல்லூரிகளை திறக்க பீகார் அரசு முடிவு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தொற்று பரவல் தடுக்க மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊரடங்கை அமலில் வைத்துள்ளது.

மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் கடந்த ஆண்டு நடைபெற்றது.இந்த ஆண்டும் கொரோனா தொற்றின் இருப்பதால் அந்த முறையே தொடர்கிறது.

தற்போது பீகார் மாநிலத்தில் கொரோனா தொற்றின் நிலைமையை ஆய்வு செய்த பின்னர், 50% வருகையுடன் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க பீகார் அரசு முடிவு செய்துள்ளது.

1 மற்றும் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், அரசு பயிற்சி நிறுவனங்கள் 50% வருகையுடன் மீண்டும் திறக்கப்படும்.

மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.மேலும் பள்ளிகளில் ஆன்லைன் கற்பித்தல் முறை தொடரும் என்று அரசு தெரிவித்துள்ளது.