Nalanda Medical College: பீகார் கல்லூரியில் 87 டாக்டர்களுக்கு கொரோனா

87 doctors at Nalanda Medical College
பீகார் கல்லூரியில் 87 டாக்டர்களுக்கு கொரோனா

Nalanda Medical College: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் நாளந்தா மருத்துவ கல்லூரியில் 87 டாக்டர்களுக்கு கொரோனா உறுதியானது. கொரோனா உறுதியான 87 பேருக்கும் குறைவான அறிகுறிகளே இருந்ததாக டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

“பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 87 டாக்டர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு சிலருக்கு அறிகுறியற்றவர்கள் மற்றும் லேசான அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பாட்னா டிஎம் சந்திரசேகர் சிங் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Corona Vaccine: இன்று சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

Corona Vaccine: கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது மற்றும் ஒமைக்ரான வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 15 வயது முதல் 18 வயது வரை சிறுவர் சிறுமியர்களுக்கு, தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.

நாடு முழுவதும் 10 கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.

சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார். பள்ளிகளில் மட்டும் 26 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அளவில் 33 லட்சத்து 20 ஆயிரம் சிறார்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட தகுதி வாய்ந்த சிறுவர்கள் கோவின் செயலி மூலமாக ஆதார் அல்லது 10ம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய 3 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், 15 முதல் 18 வயது உள்ள சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த அனுமதி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Horoscope Today: இன்றைய ராசி பலன்