விஜய் டிவி பிக் பாஸ் 4 சர்ச்சை

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதுவரை 4 சீசன்கள் ஒளிப்பரப்பாகியுள்ள நிலையில், 4 ஆவது சீசன் சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பேர் போகியுள்ளது. போட்டியாளர்கள், நிகழ்ச்சியில் அடித்துக் கொண்ட சண்டையை விட வெளியில் அதிக சண்டையிட்டு கொள்கின்றனர்.

இதற்கு தொடக்க புள்ளி, பிஹைண்ட்வுட்ஸ் விருது வழங்கும் விழா. அந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜிக்கு விருது வழங்கப்பட்டது. விருது வாங்கியவர், பிக் பாஸ் போட்டியாளர்களை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கின்றனர்.

அது தவிர்க்கப்பட வேண்டியது என்று பேசியிருப்பார். ஆனால் இந்த பேச்சு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒளிப்பரப்பான போது இடம் பெறவில்லை. இதனால் பாலாஜி விருதை திருப்பி அளித்துள்ளார்.

திரட்டி ஆரி வெற்றி பெற்றார் என அனிதா பேசியதாக ரசிகர்கள் அவர் மீது கோபமடைந்தனர்.

ஆனால் அனிதா, பாதி ஆடியோ தான் வெளிவந்துள்ளது, உண்மை என்னவென்றால், ஆரியின் வெற்றிக்கு நீங்க காரணமா என்பது தான் என்னுடைய கேள்வி, இது ஆரிக்கு எதிரானது அல்ல, நான் ஆரிக்கு எப்போதும் ஆதரவாக தான் இருந்தேன், இவர் தான் திரித்து கூறுகிறார், என லிபரா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.