White House: புதின் குறித்த அதிபர் பைடனின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது – வெள்ளை மாளிகை விளக்கம்

biden-says-putin-cannot-remain-in-power-white-house-he-didnt-mean-regime-change
வெள்ளை மாளிகை விளக்கம்

White House: உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் பேசினார். அதேபோல், போலாந்துக்கு வந்துள்ள உக்ரைன் மந்திரிகளுடனும் ஜோ பைடன் பேசினார்.

அப்போது ஜோ பைடன் பேசுகையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் “அதிகாரத்தில் நீடிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், புதின் குறித்த அதிபர் பைடனின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அவர் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகரி ஒருவர் அளித்த விளக்கத்தில், “அதிபர் பைடனின் கருத்து என்னவென்றால், புதின் தனது அண்டை நாடுகளின் மீது அதிகாரத்தை செலுத்த அனுமதிக்க முடியாது.

ரஷியாவில் “ஆட்சி மாற்றத்தை” விரும்பவில்லை. ரஷியாவில் புதினின் அதிகாரம் குறித்தோ அல்லது ஆட்சி மாற்றம் பற்றியோ அவர் விவாதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: Crime: மூன்று பேரிடம் ஒரே வீட்டை லீசுக்கு விட்டு ஏமாற்றிய தரகர் கடத்தல்