Intranasal Covid-19 vaccine : இன்ட்ரானேசல் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம்..!

intranasal Covid-19 vaccine
இன்ட்ரானேசல் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம்

Intranasal Covid-19 vaccine:: கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு மூக்கு வழியாக பூஸ்டர் டோஸ் கொடுக்கும் வகையில் இன்ட்ரானேசல் பூஸ்டர் தடுப்பூசி டோசுக்கு அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹைதராபாத்தை தலைமையமாகக் கொண்ட பாரத் பயோடெக், நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரித்து இந்தியாவுக்கு வழங்குவதுபோல் வெளிநாடுகளுக்கும் வழங்கி வருகிறது. இந்நிலையில் தனது முதல் இன்ட்ராநேசல் கோவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் எனப்படும் மூக்கு வழியாக செலுத்தப்படும் பூஸ்டர் டோஸிற்கான அனுமதி கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஜெனரலிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டவர்கள் தங்களுக்கான பூஸ்டர் தடுப்பூசியை மூக்கின் வழியாக செலுத்தும் வகையில் BBV154 எனும் பூஸ்டரை உருவாக்கியுள்ளது. BBV154 என்பது மூக்கு வழியாக செலுத்தப்படும் செயலிழக்க வைக்கப்பட்ட அடினோவைரஸ் SARS-CoV-2 வெக்டார்டு தடுப்பூசி ஆகும். பாரத் பயோடெக் இன் இன்ட்ராநேசல் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு இந்தியா இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், தடுப்பூசியின் 3 கட்ட மருத்துவ சோதனைக்கான விண்ணப்பத்தை இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல்க்கு சமர்ப்பித்துள்ளோம் என்றும் , மூக்கு வழியாக இந்த வகை பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதன் மூலம் பெரும்பாலான மக்களுக்கு இந்த தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாமென பாரத் பயோடெக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்..

பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இன்ட்ராநேசல் தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்துவதற்கான ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெற்றுள்ள நிலையில் இடைநிலை ஆய்வுகளும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் நாசில் தடுப்பூசியின் முதல்கட்ட மருத்துவ சோதனை 18 முதல் 60 வயது வரையிலான வயதுடைய நபர்களிடம் ஏற்கனவே முடிக்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் BBV154 இந்தியாவில் மனித மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட முதல் கோவிட்-19 தடுப்பூசி ஆகும். பயோடெக்னாலஜி துறை மற்றும் பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசோசியேட் கவுன்சில் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் வகை வைரஸின் அதிகப்படியான எழுச்சி மற்றும் பரவல் காரணமாக பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்களை அளிக்க வேண்டுமென பல மாநிலங்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் ம்ற்றும் தடுப்பூசி நிர்வாகம் குறித்த அதன் நிபுணர் குழுக்களின் பரிந்துரைகள் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்கப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அழகுக்கு அழகு சேர்க்கும் நீளமான முடி..!

(bharat biotech seeks dcgi nod for-phase 3 study of Intranasal Covid-19 vaccine as booster dose)