பகவான் கிருஷ்ணன் பிறந்த நாளான கோகுலாஷ்டமி நாள் இன்று.இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இன்று கிருஷ்ணனை நினைத்து வழிபடுவது மிக சிறப்பு வாய்ந்தது.மேலும் குழந்தை வரம் வேண்டிருப்பவர்கள் இன்று கிருஷ்ணனை வழிபடலாம்.
ஆகஸ்ட் 30-ஆம் தேதி கௌரி நல்ல நேரம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரையிலான காலத்தில் நிகழ்வதால் இந்த நேரத்தில் கிருஷ்ண வழிபாடு செய்ய எல்லா வளங்களையும் பெறலாம்.இன்று காலை குளித்து விட்டு பூஜை முடியும் வரை உணவருந்தாமல் கிருஷ்ண லீலைகள் படித்தும், கேட்டும் விரதம் இருக்கலாம்.முடியாதவள் பழங்கள் அருந்தலாம்.
பகவான் கிருஷ்ணனுக்கு பிடித்த பால், தயிர், வெண்ணெய், நெய், முறுக்கு, சீடை ஆகியவற்றை வைத்து வழிபடும்.இவைகள் இல்லை என்றால் வீட்டில் இருக்கும் சக்கரை கூட பூஜை க்கு வைக்கலாம் அன்போடு எதை கொடுத்தாலும் ஏற்பவன் கிருஷ்ணன்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண.. கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!! ஹரே ராம ஹரே ராம.. ராம ராம ஹரே ஹரே இந்த ஸ்லோகத்தை உங்களால் எவ்வளவு முடிகிறதோ அத்தனை முறை சொல்லி விடுங்கள்.



