ஆயுத பூஜைக்கு சுற்றுலா செல்ல சிறந்த இடம் சிக்மகளூர்

பண்டிகை காலம் வந்துவிட்டால் ஏதாவது ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்லலாம் என கூறி குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று தங்களுடைய தொழில் மற்றும் பல்வேறு வேலை பாரங்களிலிருந்து மன நிம்மதியாக சுற்றுலாவை அனுபவித்துவிட்டு வருவார்கள்.

அந்த வகையில் தமிழ் நாட்டில் குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு மற்றும் கர்நாடகத்தில் இயற்கை சுற்றுச்சூழல் கொண்ட குடகு மாவட்டம் சிக்கமகளூர் மாவட்டம் ஹாசன் மாவட்டம் என பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்வது வழக்கம்.

ஆனால் இந்திய அளவில் தற்பொழுது இயற்கை எழில் கொண்ட இடமாக சிக்கமகளூர் திகழும் வகையில் சிக்மகளூரில் உள்ள முக்கிய இடங்களான மிக உயர்ந்த மலைப் பகுதி ஆகிய முல்லையன் கிரி, பாபாபுடன்கிரி, கெம்மன்குந்தி மற்றும் ஹேப்பே அருவி கல்லத்தி அருவி போன்ற அருவிகள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் வண்ணமாக அமைந்துள்ளது.

தற்போது அக்டோபர் மாதத்தில் இந்த மலைப்பகுதியில் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேரன இயற்க்கை காட்சிகள் மலை பகுதி மிகவும் அற்புதமாகவும் மற்றும் இயற்கை எழில் கொண்ட பகுதியில் மழை வரும் பொழுது மேக மூட்டங்கள் சுற்றுலாப் பயணிகளை உரசி செல்வதும் இயற்கையான காட்சியாக இருக்கும்.

ஆகையால் இந்த ஆயுத பூஜை பண்டிகைக்கு சிக்கமஙகளூரை தேர்ந்தெடுத்து சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க கூடிய முக்கியமான இடமாக திகழ்கிறது.