காயத்ரி மந்திரத்தின் மகிமைகள் !

இறைவனை வணங்கும் மந்திரங்களில் மிக உன்னதமாக கருதப்படுவது காயத்ரி மந்திரம்.மிகமிக அதிக சக்தி வாய்ந்தது.

காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடு சொல்ல வேண்டும். காலை, மாலை இருவேளையும் சொல்லலாம்.காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி.

ஓம் பூர் புவ: ஸ்வ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்

இது அனைவரும் உச்சரிக்கும் பொதுவான காயத்தி மந்திரம் இந்த மந்திரத்திற்கு சாவித்திரி என்று பெயர். இந்த காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது.

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு மனதிலும் உடலிலும் உற்சாகம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மனமும் சிந்தனையும் தெளிவடையும்.