Beauty Tips: கருகருவென அடர்த்தியான புருவங்களை கொடுக்கக் கூடிய பொருட்கள் என்னென்ன?

அடர்த்தியான புருவங்களை கொடுக்கக் கூடிய பொருட்கள்
அடர்த்தியான புருவங்களை கொடுக்கக் கூடிய பொருட்கள்

Beauty Tips: எப்போதும் ஒருவருடைய கண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அதனை எடுப்பாக காட்டுவதற்கு புருவமும், கண் இமைகளும் அடர்த்தியாக இருக்க வேண்டும். மெல்லிய புருவம், கண்களை எடுப்பாக காட்டுவது இல்லை.

எனவே அடர்த்தியாக கருகருவென இருக்கும் புருவம், ஒருவருடைய முகத்திற்கு மேலும் அழகு சேர்க்கும். எல்லோருக்கும் அடர்த்தியான புருவம் இருப்பதில்லை. எனவே உங்களுடைய புருவ வளர்ச்சியை தூண்டுவதற்கு, நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் இந்த சிறப்பு பொருட்கள் நல்ல உபயோகமானதாக இருக்கும். அவை என்னென்ன? அவற்றை எப்படி உபயோகப்படுத்துவது? என்பது போன்ற அழகு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

பால்:

பாலில் இருக்கும் புரோட்டின் சத்து புருவ வளர்ச்சியை தூண்டும் அற்புதமான ஒரு சத்து ஆகும். உங்கள் புருவத்தின் மீது பஞ்சினால் நனைக்கப்பட்ட பாலை தடவி விடுங்கள். 15 நிமிடம் அப்படியே உலர விட்டு பிறகு கழுவினால் புருவத்திற்கு ஊக்குவிப்பு கிடைக்கும். பாலில் ‘வே புரோட்டின்’, ‘கேசின்’ போன்ற மூலக்கூறுகள் புருவத்தில் இருக்கும் முடி வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும்.

விளக்கெண்ணெய்:

விளக்கெண்ணெய் புருவத்தின் மீது மற்றும் இமைகளின் மீது தடவி மசாஜ் செய்து கொடுத்தால் இமை முடியும், கண்களுக்கு மேலே இருக்கும் புருவத்தில் அடர்த்தியான கேசமும் வளரும்.

கற்றாழை:

புருவத்தில் இருக்கும் முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு கெரோட்டின் தேவை. கற்றாழையில் இருக்கும் சதைப்பகுதியில் ‘அலோனின்’ எனும் பொருள் கெரோட்டினுக்கு இணையானது. எனவே இது முடி வளர்ச்சியை தூண்டும் அற்புத சக்தி படைத்தது. கற்றாழையில் இருக்கும் சதைப் பகுதியில் இருந்து வரும் பிசுபிசுப்பான அந்த ஜெல்லை எடுத்து கொஞ்சம் புருவத்தின் மீது தடவி தூங்கச் செல்லுங்கள். மறுநாள் காலையில் எழுந்து முகத்தை அலம்பிக் கொள்ளலாம்.

வெங்காயச் சாறு:

வெங்காயத்தில் இருக்கும் ஜூஸ் செலினியம், சல்பர் ஆகிய மூலக் கூறுகளை கொண்டுள்ளது. இது இமை முடி மற்றும் புருவ முடிக்கு பலம் கொடுத்து உதிராமல் இருக்க உதவும். வெங்காய சாறு கொஞ்சம் பஞ்சில் நனைத்து இமைகளின் மீது தடவிக் கொள்ளுங்கள். பின் அரை மணி நேரம் கழித்து முகத்தை அலம்பிக் கொள்ளலாம். இது போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வர அடர்த்தியான புருவம் கிடைக்கும். பொம்மை போன்ற இமை முடியும் வளரும்.

பெட்ரோலியம் ஜெல்லி:

பெட்ரோலியம் ஜெல்லி வறட்சித் தன்மையை நீக்கி, ஈரப்பதத்தை கொடுக்கும் ஒரு அற்புதமான பொருள் ஆகும். இதை தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பு புருவம் மற்றும் இமை முடிகளின் மீது லேசாக தடவி தூங்கச் சென்றால், அதன் ஈரப்பதம் எப்போதும் தக்க வைத்து, உங்கள் உடல் உஷ்ணமாக இருந்தாலும், முடி உதிர்வதை தடுக்கும். இதனால் அடர்த்தியான இமை முடி வளரும், புருவமும் அடர்த்தியாகும்.

மஞ்சள் கரு:

முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து அதை நன்கு பீட்டர் கொண்டு பீட் செய்தால் க்ரீம் போன்ற டெக்சர் கிடைக்கும். அதை ஒரு பிரஸ் போன்றவற்றால் எடுத்து புருவங்கள் மீது தடவி 20 நிமிடம் உலர விட்டு கழுவினால் கெரோட்டின் உற்பத்தி ஆகி முடி வளர்ச்சி அதிகரிக்கும். இதிலிருக்கும் ‘பயோட்டின்’ என்னும் மூலப்பொருள் நம்முடைய புருவத்தை நல்ல அடர்த்தியாகி கருகருவென மாற்றும்.

இதையும் படிங்க: Today Horoscope: இன்றைய ராசி பலன்