beast update கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பீஸ்ட்’. தளபதி விஜய், பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்தப்படத்தில், இயக்குநர் செல்வராகவன், கிங்ஸ் லீ உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
செல்வராகவன் இப்படத்தில் ஹேக்கராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மால் ஒன்றை கைப்பற்றி தீவிரவாதிகள் சிறைப்பிடித்து வைத்திருக்கும் மக்களை காப்பாற்றுவதுதான் கதை எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் படத்தின் புரோமோ பாடலின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. இதில், விஜய், நெல்சன், அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டனர்.
மேலும் இது குறித்த புகைப்படங்களும் நேற்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகியது. இந்த புரோமோ பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டு நள்ளிரவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கோலிவுட்டிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாலை 5 மணிக்கு‘பீஸ்ட்’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவலுடன் கூடிய ஸ்பெஷல் போஸ்டர் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: Nellai School Accident: தலைமை ஆசிரியை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
Bhringraj Oil: தலைமுடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி இலைகளை தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும்.
கீரையை சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.
பெண்களுக்கு கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும் நரையும் மாறும்.
இப்படிப்பட்ட கரிசலாங்கண்ணி எண்ணெயை கிராம புறங்களில் பலர் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கரிசலாங்கண்ணி எண்ணெயை வாங்க விரும்பினால் 9791886213 என்ற நம்பருக்கு போன் அல்லது வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.



