Beast second single : வெளியானது ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது பாடல்

beast-second-single-released
'பீஸ்ட்' படத்தின் இரண்டாவது பாடல்

Beast second single : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெட்டின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் பீஸ்ட்.

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கும் திரைப்படம் பீஸ்ட்.இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு சென்னை திரும்பிய படக்குழு அங்கு படத்தின் பிரதான காட்சிகளுக்காகப் பிரமாண்டமான ஷாப்பிங் மால் போன்று செட் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தியது.

தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் 2-வது சிங்கிள் “ஜாலியோ ஜிம்கானா” பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர் மத்தியில் ட்ரெண்ட் ஆகும் என்று எதிர்பாக்கப்படுகிறது . முதல் பாடல் “அரபிக் குத்து” பல சாதனைகளை படைத்துள்ள நிலையில், “ஜாலியோ ஜிம்கானா” பாடலின் ப்ரோமோவும் பல சாதனைகளை முறியடித்தது. முழுவதும் ஜாலி மூடில் உருவாகியுள்ள இந்த பாடல் வரும் நாட்களில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸை கலக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படிங்க : Nikki Galrani: பிரபல நடிகருடன் காதலில் நிக்கி கல்ராணி

தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் பீஸ்டின் அரேபிய குத்து பாடலுடன் நடனமாடினர்.கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் கடந்த மாதம் வெளியாக பட்டித்தொட்டியெங்கும் பட்டையக்கிளப்பி பில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது.

( Beast Second Single Jolly O Gymkhana )