பூஜா ஹெக்டே செயலுக்கு குவியும் பாராட்டு..!

நலிந்த குடும்பங்களுக்காக அறக்கட்டளை தொடங்கிய பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டேவை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

பூஜா ஹெக்டே செய்த விஷயம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. அதாவது தனது நண்பர்களுடன் இணைந்து “All about Love“ எனும் அறக்கட்டளையை துவங்கியிருக்கிறார். இதன் மூலம் நலிந்த குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய பூஜா, “மக்கள் எனக்கு கொடுக்கும் பணத்தை எதாவது ஒரு வழியில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். எனவே கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே அறக்கட்டளையை துவங்கி விட்டேன். ஆனால் இந்த அமைப்பின் மூலம் எந்தவொரு பணியையும் செய்யாமல் அதுகுறித்து பேசவிரும்பவில்லை.