நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பம் !

வளர்ப்பு பிராணிகள் மீது ஆர்வம் கொண்டவர் ஏராளம்.தான் வளர்க்கும் பூனை மற்றும் நாய் இவைகள் மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளனர்.மேலும் அதற்கு பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ போன்றவைகள் சமூக வலைத்தளங்களில் வலம் வரும்.

அந்த வகையில்,தன் வளர்ப்பு பிராணியான நாய்க்கு ஒருவர் வளைகாப்பு கொண்டாடியுள்ளார்.தேனி மாவட்டம் போடி அருகே உள்ள உப்புக்கோட்டையில் வசித்து வரும் தம்பதி.இவர்கள் இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

மேலும் அவர்கள் தங்கள் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகின்றனர்.இதில் நாட்டு நாய், பொம்மேரியன், கோம்பை, லேபர் டாக், சிப்பிபாறை, போன்ற ரகங்களின் பெண் நாய்களை வளர்த்து வருகின்றனர்.

அவர்கள் வீட்டில் அருகில் இருந்த தெருவோரம் சுற்றித்திரிந்த ஒரு நாயை வீட்டிற்கு எடுத்து பாதுகாப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.அதற்கு சிலுக்கு என்ற பெயர் வைத்துள்ளனர்.அந்த நாய் கருவுற்று இருப்பதை கால்நடை மருத்துவர் மூலம் அறிந்தனர்.

இதை அறிந்த அவர்கள் அந்த நாய்க்கு வளைகாப்பு நடத்துவது போலவே நாய்க்கு பிடித்த உணவுகள் , புது சேலை மற்றும் மாலைகள் அணிவித்து வளைகாப்பு கொண்டாடியுள்ளார்.இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படிங்க : அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை