NEET: தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து நிலைபாட்டில் அதிமுக உறுதியாக இருக்கும்- விஜயபாஸ்கர்

vijaya baskar
vijaya baskar

NEET: ஜனவரி 8ஆம் தேதி அணை இன்றைய தினம் திட்டமிட்டபடி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கி வருகிறார். இந்த கூட்டத்தில் அதிமுக கட்சியின் சார்பில் மனோஜ் குமார் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

பாஜக சார்பில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டுள்ளார். இதுபோன்று பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் கட்சி போன்ற பல கட்சியின் சார்பில் கலந்து கொண்டுள்ளனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கூறினார். அதோடு மட்டுமில்லாமல் நீட் தேர்வுக்கு ஏழை மாணவர்கள் பயிற்சி பெற முடியாது என்றும் உரையாற்றினார்.

இதற்கு அதிமுக ஆதரவு தருவதாக கூறியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து நிலைபாட்டில் அதிமுக உறுதியாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். நீட்தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக நிச்சயமாக பணியில் இருக்கும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மதித்து ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தான் மக்களாட்சியின் தத்துவம் என்றும் விஜயபாஸ்கர் கூறினார். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காப்பாற்ற வேண்டும் என்பதே நம் அனைவரின் நோக்கம் என்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

இதையும் படிங்க: Medical Counselling: மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் 2 வாரங்களில் தொடங்குகிறது