Niger Attack: பஸ், டிரக் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு

attack-on-bus-truck-kills-21-in-niger-attack
21 பேர் உயிரிழப்பு

Niger Attack: மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் போகோ ஹராம், ஐ.எஸ்., அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த பயங்கரவாத மற்றும் கிளர்ச்சி அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் அரசுப்படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், பண்டிட்ஸ் என்ற ஆயுதமேந்திய கொள்ளை கும்பலும் நைஜரில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நைஜர், புர்கினா மற்றும் மாலியின் ஆகிய மூன்று நாட்டு எல்லைகளின் மையத்தில் அமைந்துள்ள தில்லாபெரி மாகாணத்தின் எல்லைப்பகுதியில் உள்ள சாலையில் இன்று பஸ், டிரக் உள்ளிட்ட சில வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. இதில், 25-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

இதையும் படிங்க: GATE Result 2022 : கேட் தேர்வு முடிவுகள்

பெட்டல்கொலி என்ற பகுதி அருகே சென்றபோது பஸ், டிரக்கை பைக்கில் வந்த ஆயுதமேந்திய கும்பல் இடைமறித்தது.

இதனை தொடர்ந்து பஸ், டிரக்கில் இருந்தவர்களை நோக்கி அந்த கும்பல் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பஸ், டிரக்கில் இருந்தவர்கள் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் 7 பேர் எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த தாக்குதலை போகோ ஹராம் அல்லது கிளர்ச்சியாளர்கள் நடத்தியிருக்கலாம் என நைஜர் அரசு தெரிவித்துள்ளது.

Attack on Bus, Truck Kills 21 in Niger

இதையும் படிங்க: Ukraine: உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த முடியாது- ரஷியா