எனிமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

விஷால் – ஆர்யா நடிப்பில் உருவாகும் ‘எனிமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதையடுத்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆர்யா நீ இனி எனது சிறந்த நண்பராக இருக்கமுடியாது. நான் உனக்கு மிக மோசமான எதிரி என்பதை வரும் 22ஆம் தேித காண்பிக்கிறேன். என்னிடமிருந்து முதல் பஞ்ச்சை வாங்க காத்திரு” என பதிவிட்டார். இதற்கு பதலளிக்கும் விதமாக ஆர்யா தனது ட்விட்டரில், “டேய் நீ முதலில் 22ஆம் தேதி எழுந்து படப்பிடிப்புக்கு வா” என கமெண்ட் செய்துள்ளார்.