அரண்மனை 3 படம் கொஞ்சம் ஏமாற்றம் தான்- குமுறும் ரசிகர்கள்

சுந்தர் சி. இயக்கத்தில் ஆர்யா, ராஷி கன்னா, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த அரண்மனை 3 படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து தன் படம் தியேட்டரில் வெளியாகியிருக்கும் சந்தோஷத்தில் ட்வீட் செய்துள்ளார் ஆர்யா.

பேய் கான்செப்ட்டுடன் முதல் பாதி மெதுவாக செல்கிறது. ஆர்யா உடம்புக்குள் பேய் எப்படி நுழைந்தது என்று தெரியவில்லை. இதுவரை நன்றாக இருக்கிறது. பிஜிஎம் மற்றும் பாடல்கள் அருமை.
சுந்தர் சி. தன் வழக்கமான ஃபார்முலாவை பயன்படுத்தியிருக்கிறார். முதல் இரண்டு பாகங்களுடன் ஒப்பிடும் போது இது ஏமாற்றம் அளிக்கிறது.

சுந்தர் சியின் மொக்க படத்துல கூட பத்துல ஒரு 4 காமெடியாவது சிரிக்குற மாதிரி இருக்கும். ஆனால் இதுல யோகிபாபு, விவேக், நளினி, மனோ பாலானு எல்லோரும் இருந்தும் ஒரு காமெடிகூட ஒர்க் ஆகல.

இதையும் படிங்க: உடன்பிறப்பே திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியீடு