அர்னாப் கோஸ்வாமி கைது: நடந்தது என்ன?

பொறியாளர் ஒருவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக மும்பை அலிபாக் காவல்துறையினர், அர்னாப் கோஸ்வாமியை இன்று கைது செய்துள்ளனர்.

அன்வாய் நாயக் என்னும் ஆர்கிடெக்ட் மற்றும் அவரது தாயார் 2018ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர்.

அன்வாய் தனது தற்கொலைக் கடிதத்தில் தனது மரணத்துக்குக் காரணமாக ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பெயரைக் குறிப்பிட்டு இருந்தார் கூறப்படுகிறது.இந்த வழக்கில் அர்னாப் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால் போலீஸ் இதுகுறித்து எதுவும் விளக்கம் தரவில்லை.

அர்னாப் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்திய அளவில் ArnabGoswami என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த ஹாஷ்டேகில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

கங்கனா ரணாவத் அர்னாபுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். பிரகாஷ் ஜவடேகர் இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அர்னாப் கோஸ்வாமி எந்த வழக்கில் கைது செய்யப்பட்டாரோ அந்த வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது. அந்த வழக்கை தற்போது மீண்டும் திறந்து இருப்பதாக கூறுகிறது ரிபப்ளிக் டிவி.