1981 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதியில் பிறந்த நடிகை அனுஷ்கா தற்போது 40 வயதை எட்டியுள்ளார் . தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு சினி மார்க்கெட்டிலும் நீங்காத இடம் பிடித்து இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் அனுஷ்கா.
தமிழில் 2007ஆம் ஆண்டு வெளியான மாதவன் இரட்டை வேடத்தில் நடித்த ரெண்டு என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆன அனுஷ்கா பட வாய்ப்புகளை அதிகப்படுத்த மொபைலா மொபைலா என்ற பாடலில் படு கவர்ச்சியான உடையில் இளைஞர்கள் மனம் துடிக்கும் வகையில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போட்ட அனுஷ்காவுக்கு பின்பு மார்க்கெட் எகிறியது
என்னதான் அனுஷ்கா தெலுங்கு நடிகை என்றாலும் அனுஷ்கா நடித்த படங்கள் தமிழில் பெரும் வரவேற்பை பெற்றது அருந்ததி, வேட்டைக்காரன் ,சிங்கம் 1 ,சிங்கம்2, சிங்கம்3 , இரண்டாம் உலகம் ,என்னை அறிந்தால், லிங்கா, தாண்டவம், வானம், பாகுபலி 1, பாகுபலி 2, ருத்ரமாதேவி என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இதையும் படிங்க: இன்றைய ராசி பலன்



