Annamalai: தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது – அண்ணாமலை

annamalai-said-bjp-becomes-third-largest-party-in-tamil-nadu
3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது

Urban local body election: தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இன்றைய வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றியுள்ளது. மேலும், 80 சதவீதத்துக்கும் கூடுதலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணிக்கு கிடைத்த வெற்றி தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க பல வார்டுகளில் தங்களது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியை பா.ஜ.க நேர்மறை எடுத்துக்கொண்டு கொண்டாடிவருகின்றனர். இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற இடத்தை பா.ஜ.க பெற்று விட்டது.

இதையும் படிங்க: DMK: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி

கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க 15 சதவீத வாக்கு பெற்றுள்ளது. வெற்றி பெற்ற பா.ஜ.க, தி.மு.க வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகள். கட்சியின் வலிமையை பார்க்க வேண்டுமென உள்ளாட்சியில் தனித்து போட்டியிட்டோம். அ.தி.மு.க மிகப்பெரிய கட்சி; ஒருமுறை தோல்வியை தழுவியதால் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது.

கொங்கு மண்டலத்தில் தி.மு.க அதிகம் வெற்றி பெற்றதால் அவர்கள் கோட்டை என்று சொல்ல முடியாது. பா.ஜ.க, அ.தி.மு.க இணைந்து நின்றால் கொங்கு எங்கள் கோட்டையாகவே இருக்கும். திராவிட மாடல் ஆட்சி என்கிறார் முதல்வர். காக்கா இருக்க பனம் பழம் விழுந்த கதையாக உள்ளது.

எது திராவிட மாடல் என்பதை அவர் விளக்க வேண்டும். காங்கிரஸ் தனித்து நின்றால் டெபாசிட் கிடைக்குமா என்பதை பார்க்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஆக்சிஜனை சுவாசித்து உயிர் வாழ்கின்றன. பாஜகவை விமர்சிக்க கம்யூனிஸ்ட். கட்சிகளுக்கு தகுதியில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Unprecedented victory for BJP in today’s urban local body elections show us the love says BJP annamalai

இதையும் படிங்க: DMK: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி